கடலூர்: ஆசிரியர் தின விழாவையொட்டி 1000 மரக்கன்றுகள் நடும் பணி

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்று நட்டு வைத்து இலவச மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

Update: 2021-09-05 03:07 GMT

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் மரக்க்கன்றினை நட்டுவைத்து, இலவச மரக்கன்றுளை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

இளந்தளிர் கடலூர் என்ற அமைப்பு மூலம் இதுவரை 12 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளில் 1075 மரக்கன்றுகள் பாதுகாப்புடன் நடப்பட்டு முறையாக பாரமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றினை நட்டுவைத்து, இலவச மரக்கன்றுளை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து 1000 மரக்கன்றுகளை கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கூத்தபாக்கம் புனித வளனார் பெட்ரிகுலேக்ஷனன் பள்ளி, ரூட்ஸ் கிட்ஸ் பள்ளி, வண்டிபாளையம், ஊராட்சி ஒன்றியம் தொடக்க பள்ளி, ஆண்டார்முள்ளிப்பள்ளம் ஊராட்சி ஒன்றியம் பள்ளி அகிய பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவுள்ளது. இந்நிகழ்ச்சியில் இளந்தளிர் அமைப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News