கடலூரில் பொதுமக்களுக்கு இலவச முக கவசம் வழங்கி காெராேனா விழிப்புணர்வு

கொரோனா பரவலை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தினார்.

Update: 2022-01-05 03:00 GMT

கொரோனா பரவலை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு முக கவசம் வழங்கி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் கொரோனா முன்றாம் அலை பரவத் தொடங்கியுள்ளது, தற்போது உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தற்போது மீண்டும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமை தாங்கி கொரோனா பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

அப்போது அவ்வழியாக சென்ற ஏராளமான பொதுமக்கள் முக கவசம் அணியாமல் சென்றதை பார்வையிட்டார் அப்போது உடனடியாக முகக் கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக நிறுத்தி அனைவருக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதுமட்டுமின்றி வருங்காலங்களில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பினர் இதனைத் தொடர்ந்து வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் கடைகளை கவரக்கூடிய பொதுமக்களுக்கு கையில் கிருமி நாசினி தெளித்து முகக் கவசம் இல்லாமல் வரக்கூடிய பொதுமக்களுக்கு உரிய முறையில் முகக்கவசம் வழங்கி சமூக இடைவெளியுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும் என பேசினார்.

Tags:    

Similar News