தொடர் கனமழை: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவு

Update: 2021-11-19 14:17 GMT

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது. இருந்தபோதிலும் விழுப்புரம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், சாத்தனூர் அணை நிரம்பி திறக்கப்பட்டதை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் கடலூரில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. குடியிருப்புப் பகுதிகளும், முற்றிலுமாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திருமண மண்டபங்கள் என முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது, இந்நிலையில் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாளை நவம்பர் 20ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News