கடலூரில் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

கடலூரில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-09-01 11:39 GMT

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக  மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் முகக் கவசம் அணிந்து வகுப்பறைக்குச் செல்ல ஆசிரியர்களால் அறிவுறுத்தப்பட்டனர்.

பள்ளியின் நுழைவாயிலில் மாணவ மாணவிகளுக்கு கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ஒரு வகுப்பறைக்கு இருபது மாணவர்கள் மட்டுமே அமர்ந்து பாடம் எடுக்க வேண்டுமென அரசு கட்டுப்பாடு விதித்த நிலையில் கடலூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலெக்டர் பாலசுப்பிரமணியம்  ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறதா என்பதை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மாணவ மாணவிகளிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்களா என கேள்வி எழுப்பி அதனை உறுதிப்படுத்திக் கொண்டார். கடலூரில் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி, மற்றும் ஸ்ரீ வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தை பொருத்தவரை 94% ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தடுப்பூசி போடுவதையும் உறுதி செய்ய வேண்டுமெனவும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

Tags:    

Similar News