காசநோய் கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

கடலூரில் காசநோய் கண்டறியு ம் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை கலெக்டர் பாலசுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Update: 2021-09-06 13:45 GMT

கடலூரில் காசநோய் கண்டறியும் எக்ஸ்ரே வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர் 

தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் மூலம் காசநோய் கண்டறியும் எக்ஸ்ரே வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், இரண்டு வாரங்களுக்கு மேல் சளி, இருமல் இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். காசநோய்க்கு 6 முதல் 8 மாதங்கள் வரை முழுமையான சிகிச்சை மருந்துகளையும் குறுகியகால நேரடி சிகிச்சை முறையில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காசநோய்க்கு சளிப் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனை நடைபெறுகிறது. மருந்துகளை முழுமையாக முறையாக உட்கொள்ளவேண்டும் காச நோயிலிருந்து பூரண குணமடைய அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்து கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து நடமாடும் எக்ஸ்ரே வாகனம் கடலூர் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, மருங்கூர், வடலூர், மங்கலம்பேட்டை, நல்லூர், கம்மாபுரம், ஆயங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News