அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை- குறைந்து கொண்டே வரும் கை தட்டல்

அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை இருப்பதால் சர்க்கஸ் கூடாரங்களில் அதற்கான கைதட்டலும் குறைந்து கொண்டே வருகிறது.

Update: 2022-01-24 14:20 GMT

சாகசம் செய்யும் பெண் கலைஞர்.

கோடை விடுமுறை தொடங்கி விட்டால், சிறியவர் முதல் பெரியவர் வரை நம்ம ஊர்ல போடுற சர்க்கஸ் மற்றும் பொருட் காட்சிகளுக்கு சென்று பொழுதுகளை போக்க அதிக அளவு கூட்டம் கூட்டமாக சென்ற காலம் அது. சர்க்கஸ் வந்தால் குழந்தைக்கு கொண்டாட்டம் யானைகள், புலிகள், சிங்கங்கள், அழகு நிறைந்த பறவைகள், பேசும் கிளிகள், சைக்கிள் ஓட்டும் குரங்குகள், வித்தை காட்டும் பப்பிகள் எல்லாவற்றையும் ஒரு இடத்தில் காண்பிக்கும் இடம் அது.

இப்படி கதாநாயகர்களாக காட்சியளித்த சர்க்கஸ் கலைஞர்கள் நிலையோ இன்று தலைகீழாய் மாறி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு பிறகு கடலூரில் சர்க்கஸ் போடப்பட்டுள்ளது.


மிருக வதைச் சட்டம் காரணமாக சர்க்கஸ் கூடாரங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுவதில்லை. விலங்குகள்தான் சர்க்கஸ்களின் ஆதாரம், தற்போது ஒட்டகம், குதிரை நாய் போன்ற விலங்குகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த விலங்குகளை பார்ப்பதற்காகவே சொற்பமான மக்கள் தற்போது வந்து செல்கின்றனர்,

மாநகராட்சி வரி, போக்குவரத்து செலவு கலைஞர்கள் செலவு, விளம்பரம், ஆள் சம்பளம் என எல்லா செலவுகளும் போக தற்போது 70-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடலூரில் போடப்பட்டுள்ள சர்க்கஸில் பணியாற்றி வருகின்றனர்.

ஒரு இரண்டு மணி நேரம் மக்களை வியக்க வைக்க, சிரிக்க வைக்க இவர்களது பணிக்கு கிடைக்கும் கைத்தட்டல் சத்தங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன, நூற்றுக்கும் மேற்பட்ட சர்க்கஸ் நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது பத்துக்கும் குறைவான சர்க்கஸ் நிறுவனங்களே உள்ளன, அழிந்து வரும் நிலையில் உள்ள சர்க்கஸ் கலை.

நகரமயமாகி செல்போன்கள் முடங்கி விட்ட இந்த வாழ்க்கை முறையினால் யாரை குறை சொல்ல முடியும்? இந்த கிழிந்த கூடாரங்களுக்குள் பல கலைஞர்கள் தனக்குத் தெரிந்த வேலையை செய்து பசியை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News