கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது

கடலூர் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2021-12-02 06:08 GMT

கடலூரில் தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து  கடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை மூன்று பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்குவை தாக்கிவிட்டு அதே அரிவாளால்  கண்ணாடியை உடைத்து விட்டு சென்றனர். பேருந்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சியைக் கொண்டு ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடலூர் பகுதியை சேர்ந்த பிரிதிவி ராஜன் மற்றும் சீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த மருதுவுடன் இணைந்து தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. மருது பெரிய காட்டு பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால் அவரது நண்பர்களான ரவுடிகளை அழைத்து வந்து மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து மூன்று பேரையும் கைது செய்த ரெட்டிசாவடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சி.சி.டி.வி. பதிவில் தோன்றும் ரவுடிகள் பேருந்து ஓட்டுனரை வெட்டிவிட்டு பேருந்து கண்ணாடிகளை உடைக்கும் பரபரப்பு காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News