கடலூரில் கொரோனாவில் இறந்தவர்கள் உடல்களை திறந்த வெளியில் எடுத்து செல்லும் அவலம்

கடலுார் அரசு மருத்துவமனையில் இறக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்கள் பாதுகாப்பற்ற முறையில் சவங்கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது

Update: 2021-06-02 06:45 GMT

கடலூர் மருத்துவமனையில் இருந்து சாலை வழியே எடுத்து செல்லப்படும் உடல்

கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் உடல்களை மிகவும் பாதுகாப்பான முறையில், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ளது.ஆனாலும், அவை முறையாக கடைபிடிக்காத நிலையே பல இடங்களில் உள்ளது. சில இடங்களில் கொரோனாவில் இறப்பவர்கள் உடல்களை உறவினர்களே அடக்கம் செய்கின்றனர்.

இந்நிலையில், கடலுார் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் கட்டுப்பாடுகள் என்பதே கிடையாது. யார் வேண்டுமானாலும் நோயாளிகளை சர்வசாதாரணமாக பார்த்துச் செல்லும் நிலை உள்ளது. அங்கு இறக்கும் நோயாளிகள் உடல்களை முழுமையாக பேக்கிங் செய்யாமல், உடல் மீது துணியை மட்டும் சுற்றி, ஸ்டெச்சரில் வைத்து, மருத்துவமனை வெளியில் கடலுார்- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள சவக்கிடங்கிற்கு தள்ளி செல்கின்றனர். இதனை பார்க்கும் மக்கள் மற்றும் நோயாளிகள் பயத்தில் அங்கிருந்து ஒட்டம் பிடிக்கின்றனர்.

கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை, பாதுகாப்பான முறையில் ஆம்புலன்ஸ் மூலம் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்வதற்கு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Tags:    

Similar News