விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை: கடலூரில் பாஜக ஆர்ப்பாட்டம்

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கக் கோரி கடலூரில் பாஜக மற்றும் சிலை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2021-09-06 14:11 GMT

கடலூரில் பாஜகவினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம்

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இந்து முன்னணி அமைப்பினர், மற்றும் விநாயகர் சிலை நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அஷ்வதர்மா தலைமையில் தமிழ்நாடு விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், என 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது டாஸ்மாக்குக்கு அனுமதி, விநாயகர் சதுர்த்திக்கு தடையா?  என முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு அனுமதி கொடுக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியும் 3 அடி விநாயகர் சிலைகளை சாலையில் வைத்தும் கைகளில் விநாயகர் சிலைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News