சொத்து வரி உயர்வு: அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

Update: 2022-04-12 05:45 GMT

தேர்தலின் போது சொத்துவரி உயர்த்தபடாது என்று மக்களிடம் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது மக்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் வரியை உயர்த்தியுள்ளது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்களது கண்டத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நடைபெற்ற கடலூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சங்கீதா வசந்த ராஜ், சுரேஷ்பாபு,ஏஜி தர்ஷனா, வினோத், பரணி முருகன், அலமேலு ஆகியோர் சொத்து வரி உயர்வுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மாமன்ற கூட்டத்தில் கருப்பு உடை மற்றும் பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டு மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News