அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சம்பத் பிரச்சாரம்

கடலூரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சம்பத் பிரச்சாரம் செய்தார்.

Update: 2022-02-16 11:44 GMT

கடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் பிரச்சாரம் செய்தார்.

தமிழகம் முழுதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அ.தி.மு.க. கடலூர் வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் கடலூர் மாநகராட்சியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடலூர் மாநகராட்சியில் 1வது வார்டு முதல் 21 வார்டுகள் வரை பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத் திறந்தவெளி வாகனத்தில் வார்டு வாரியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய சம்பத் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம். ஒன்பது மாதங்களில் திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிர்வாக திறனற்ற அரசாக தி.மு.க. அரசு உள்ளது. ஊழலின் ஊற்று தி.மு.க- சுயநலத்திற்காக திட்டங்களை கொடுக்கும் கட்சி தி.மு.க. கடலூரில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஐயப்பன் 8 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் இல்லாமல் இருந்திருந்தால் நில அபகரிப்பு வழக்கில் சிறையில் இருந்து இருப்பார் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News