கடலூர்: கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-07 11:40 GMT

கடலூர் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டம் முழுவதும் 114 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. குறுவை சாகுபடி முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது சரியாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் கொள்முதல் செய்யப் படாமல் மழையில் நனைந்து வீணாகி வருகிறது தொடர்கதையாகியுள்ளது.

தமிழக அரசு கடலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனவும், மழையில் நனைந்து வீணாகும் நெல்களை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக குற்றம் சாட்டியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழக அரசையும் ,கடலூர் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து  கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News