கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவர்- மாமியார் கைது

கடலூரில் பெண் வன அலுவலருக்கு கஷாயம் என கூறி கருக்கலைப்பு மருந்து கொடுத்த கணவன் - மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-16 09:55 GMT

கைது செய்யப்பட்ட தாய் -மகன்.

கடலூர் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கும் வன அலுவலராக பணியாற்றி வரும் 29 வயது பெண்ணிற்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் கணவர் வீட்டில் 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதலாக வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தி வந்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை திட்டி மனவேதனைக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு கஷாயம் போன்ற திரவத்தை கட்டாயப்படுத்தி கொடுத்துள்ளனர். இதில், அவரின் கர்ப்பம் கலைந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் வன அலுவலர் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது உண்மையென தெரிய வந்ததைத் தொடர்ந்து கணவர் ஐயப்பன், மாமியார் மல்லிகா மற்றும் இரண்டு நாத்தனார்கள் மீது வழக்குப்பதிவு செய்து கணவர், மாமியாரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News