கோவையில் ஜவுளிக் கடைக்கு சீல்

கோவையில் கொரோனா விதமுறைகளை மீறிய ஜவுளிக்கடையை மாநகராட்சிஅதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

Update: 2021-05-14 02:00 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வருகின்ற 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், நகைக்கடைகள், தியேட்டர்கள் ஆகியவை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவை ஒப்பணகார வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பின்புறம் உள்ள கதவை திறந்து வாடிக்கையாளர்கள் உள்ளே அனுப்பி வியாபாரம் செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக இது தொடர்ச்சி யாக நடந்து வந்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளிக்கடைக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது பின் பக்கம் வழியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பி வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கொரோனா ஊரடங்கை மீறி கொரோனா தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டு வந்த அந்த ஜவுளிக்கடையை பூட்டி சில் வைத்தனர்.

Tags:    

Similar News