இளம் தாய்மார்கள் கவனத்துக்கு...

பிறந்த குழந்தைக்கு, ஆறுமாதங்களில் பல் முளைக்கும் காலகட்டத்தில், தாய்மார்கள் கவனமாக குழந்தைகளின் பற்களை பராமரிப்பது அவசியமாகும்.

Update: 2022-07-28 06:59 GMT

குழந்தைகளின் பற்களை பராமரிப்பதில், தாய்மார்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களிலிருந்து பற்கள் முளைக்க துவங்கிவிடும். ஈறுகளின் உள்ளேயிருந்து பற்கள், வெளியே வரும்போது எரிச்சல், ஈறு வீக்கம், ஈறு மென்மையாதல் போன்ற சிரமங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் கடிப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். இதை தவிர்க்க குழந்தைகளின் ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வழிமுறைகள்:

பற்கள் முளைக்கும் காலகட்டத்தில், தாயின் அரவணைப்பும் கண்காணிப்பும் முக்கியம்.

குளிரவைக்கப்பட்ட, சிறிய உலோக கரண்டியை குழந்தையின் ஈறுகளில் வைத்து வைத்து எடுத்தால், சற்று குளிர்ச்சியாக உணர்வார்கள்.

குளிர்ந்த பழங்களை 'மெஷ் ஃபீடரி'ல் (Mesh Feeder) போட்டு மென்று சாப்பிடக் கொடுக்கலாம்.

பற்கள் முளைக்கும்போது வாய்ப்பகுதி ரணமாக இருக்கும். இந்தத் தருணத்தில் வாயில்வைத்து விளையாடும் 'Teething Toys' எனப்படும் பொம்மைகளைக் கொடுக்கலாம்.

குழந்தையின் வாயில் எச்சில் ஒழுகும்போதெல்லாம் அதைத் துடைத்துவிட வேண்டும். அது குழந்தை சுத்தமாகவும் ஈரமில்லாமலும் இருக்க உதவும்.

இதுபோன்ற பாதுகாப்பு முறைகளை கையாளும் போது, பற்கள் முளைக்கும் வேளையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறையும்.

Similar News