செந்துறை அருகே திரவுபதியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நடைபெற்ற கோயில் தேரோட்டம் மற்றும் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-02-26 10:30 GMT

குறிச்சிகுளம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.


செந்துறை அடுத்துள்ள குறிச்சிக்குளம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் தேரோட்டம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கடந்த 8 ம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், பாரதம் படிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவில்  சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தேன், திரவியம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து,  காளியம்மன், திரவுபதியம்மன், விநாயகர் உட்பட பரிவார தெய்வங்கள் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. தேரை கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, மாலை கோயில் அருகேயுள்ள திடலில் பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில், குறிச்சிகுளம், அசாவீரன்குடிக்காடு, ஆர்எஸ்.மாத்தூர், பூமுடையான் குடிக்காடு, கஞ்சமலைப்பட்டி, நயினார் குடிக்காடு, படைவெட்டி குடிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News