அரியலூர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூர் - செந்துறை ரவுண்டானாவில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-07 12:25 GMT

அரியலூர் - செந்துறை ரவுண்டானாவில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

அரியலூர் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் செந்துறை ரவுண்டானா பகுதியில் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையாக குடிநீர் வழங்கப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News