மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆய்வு

திருமானூர் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை, அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா ஆய்வு செய்தார்.

Update: 2021-12-01 00:00 GMT

கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில்,  மழைநீரால் சூழப்பட்டுள்ள வயல்களை எம்எல்ஏ சின்னப்பா பார்வையிட்டார். 


அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக,  சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள்,  தற்போது தண்ணீரால் சூழப்பட்டு படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளான கீழகாவட்டாங்குறிச்சி, இலந்தைகூடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை எம்எல்ஏ சின்னப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தண்ணீர் வடிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவருடன் உடன் திருமானூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, மதிமுக ஒன்றிய செயலாளர்(மே) மாணிக்கவாசு, கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், பளிங்காநத்தம் ஒன்றியக்குழு உறுப்பினர் லெட்சுமி ரமேஷ்குமார், உதவி வேளாண்மை அலுவலர் முருகன், துணை வேளாண்மை அலுவலர் பால்ஜான்சன் உட்பட பலரும் உடனிருந்தனர்.

Tags:    

Similar News