அரியலூர்: கனமழையால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-11-18 16:45 GMT

அரியலூர் மாவட்டம் முமுவதும் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்திரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென மழை துவங்கியது. தொடர்ந்து பலமுறை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், வெள்ளநீர் பெருக்கெடுத்து தெருக்களில் ஓடியது.

இதனையடுத்து பள்ளிமாணவர்களின் சிரமம் கருதி, நாளை ஒருநாள் (19.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுமுறை அளித்துள்ளார்.

Tags:    

Similar News