அரியலூர்:செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

அரியலூர் மாவட்டத்தில் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.

Update: 2021-11-09 06:20 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மற்றும் கல்லூரி பயிலும், பணிபுரியும் அல்லது சுயத்தொழில் புரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார் செல்போன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட கை, கால் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றிய மற்றும் 75 சதவீதத்திற்குமேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட கல்லூரி பயிலும், பணிபுரியும் அல்லது சுயத்தொழில் புரியும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்;திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.

எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்தவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று (தையல் பயிற்சி சான்று, கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் புரிவோருக்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலவலகம், அறை எண்:17, தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்-621704 ல் 17.11.2021 அன்று நடைபெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News