முன்னாள் எம்எல்ஏ இளவழகன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு

அரியலூர் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் .

Update: 2022-06-20 14:37 GMT

அரியலூர் மாவட்ட முன்னால் அதிமுக மாவட்டச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.


அரியலூர் மாவட்ட முன்னால் அதிமுக மாவட்டச்செயலாளரும், முன்னால் எம்எல்ஏவுமான இளவழகன் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக பதவிஏற்றுக்கொண்டார். சில நாட்களிளேயே  சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட்டதால் அதிமுக பொதுக்குழுவில் ச்சிகலாவிற்கு வழங்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு கட்சியின் அதிகாரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்ததால் இரட்டை தலைமை மீது பழி சுமத்தப்பட்டது. அதிமுகவில் இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம்  நிறைவேற்ற இபிஎஸ் தரப்பு தீவிர முயற்ச்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்க்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று இருந்த விதியை மாற்றி, அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது. அந்த வகையில் அவர்களது பதவிக்காலம் 5 ஆண்டுகள் உள்ளது.

எனவே எடப்பாடி பழனிசாமி பக்கம் 50க்கும் மேற்பட்ட  அளவிலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. மேலும் பல முன்னாள் மாவட்ட செயலாளர்களும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் அரியலூர் மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், 2001 - 2006 வரையிலான அரியலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பூங்கொத்து கொடுத்து ஒற்றைதலைமையாக எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News