அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு இழப்பீடு 30 லட்சம் வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-27 09:05 GMT

அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

அரியலூரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலை விவசாயிகளிடமிருந்து கடந்த 30 ஆண்டு முன்பு சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்காக சிமெண்ட் ஆலையை சுற்றி உள்ள புதுப்பாளையம், பெரியநாகலூர், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, நெறிஞ்சிக்கொரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாய நிலங்களை கையகப்படுத்தியது.

இதற்கு சந்தை மதிப்பாக சிறிய அளவிலான தொகையே வழங்கப்பட்டது. இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை 18 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு ஏக்கர் ஒன்றுக்கு 30 லட்சம் வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்பவும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 5 பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News