அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

குளத்து தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வந்த மக்கள் மீன்கள் செத்துமிதப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனகுற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2021-06-21 10:26 GMT

அரியாகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.

குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இராயம்புரம் கிராமத்தில், ஆனந்தவாடி சாலையில் அமைந்துள்ள அரியாகுளம். இந்த குளம் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த அரியாகுளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. செத்த மீன்கள் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்து தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வந்த மக்கள் மீன்கள் செத்து மிதப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.  செத்த மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News