அரியலூர் அருகே தரமான அரிசி வழங்க கோரி நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அரியலூர் மாவட்டம் இராயம்புரம் அரசு நியாயவிலைக் கடையில் தரமான அரிசி வழங்காததை கண்டித்து கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-06 07:04 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இராயம்புரம் கிராமத்தில் கடந்த நான்கு மாதங்களாக நியாய விலை கடையில் தரமான அரிசி வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் அரசு அறிவித்துள்ள தளர்வுகற்ற ஊரடங்கால் பொதுமக்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

அரசு நியாயவிலைக் கடையில் வழங்கக் கூடிய உணவு பொருட்களை வாங்கி அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இராயம்புரம் அரசு நியாயவிலைக் கடைக்கு இம்மாத அரிசியை வாங்குவதற்காக இன்று பொதுமக்கள் சென்றுள்ளனர்.

அப்போது தரம் குறைவான குண்டு ரக அரிசியை வழங்குவதை கண்டு, பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமான அரிசியை வழங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த செந்துறை போலீஸார் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சன்னரக அரிசி வழங்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் தங்களது ரேசன்கார்டுக்குரிய அரிசியை வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News