அரியலூர்: போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநர் சானிடைசர் குடித்து பலி!

அரியலூரில் மதுவிற்கு பதிலாக சானிடைசரை குடித்த ஆட்டோஓட்டுநர் உயிரிழந்தார். 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2021-06-10 05:48 GMT
சானிடைசர் குடித்து உயிரிழந்த ஆட்டோ டிரைவர்.

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால்  அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரியலூர் மேல அக்ரஹாரம் தெருவை சேர்ந்த இளங்கோவன் ஆட்டோ ஓட்டுனர் இளங்கோவனும், அவரது நண்பர்கள் மோகன், சரவணன் ஆகிய மூவரும் அடிக்கடி ஒன்றுகூடி மதுஅருந்துவது வழக்கம். தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபாணம் கிடைக்காமல் தவித்துள்ளனர்.

கடந்த 7ம் தேதி மூவரும் போதைக்காக தற்போது கிருமிநாசினியாக பயன்படுத்தப்படும் சானிடைசரை தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர் இளங்கோவன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இன்று காலை உயிரிழந்தார்.  இளங்கோவன் நண்பர்களான மோகன் மற்றும் சரவணன் ஆகியோர் பாண்டிச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சானிடைசரை குடித்து உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் இளங்கோவன் குறித்து அரியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுகிடைக்காததால் சானிடைசர் குடித்து ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News