திமுக தலைவர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை

அரியலூரில் திமுக தலைவர் கருணாநிதி சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2021-06-03 04:32 GMT

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், அரியலூர் திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் மாலையணிவித்து மரியாதை செய்தார்.

அரியலூர் மாவட்டம், முன்னால் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், அரியலூர் திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் மாலையணிவித்து மரியாதை செய்தார்.

இதனையடுத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட, கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நரிக்குறவர்கள் 100பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, திமுக மாநில பொறுப்பாளர் பாலு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, நகரச்செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் கதிரவன், மதிமுக ஒன்றிச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News