அதிகாரிகளை "லெப்ட் அண்ட் ரைட்" வாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர்

அரியலூர் - பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மாவட்ட கலெக்டர்.

Update: 2022-05-09 13:24 GMT

அரியலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பேசினார்.

அரியலூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் ஆய்வின்போது மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கடுமையாக கடிந்து கொண்டார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடமைக்காக அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மனுக்களின் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர் மயிலே மயிலே என்றால் இறகு போட மாட்டீர்கள் அதிமேதாவிகள் போல அனைவரும் நடந்து கொள்கிறீர்கள் உங்களை பாராட்டி, சீராட்டி தெரியாததை சொல்லி கொடுத்து வேலை செய்யச் சொன்னால் செய்ய மாட்டீர்கள், மனுக்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் ஏதாவது கதை சொல்லிக்கலாம் என்ற எண்ணத்தில் வருகிறீர்கள் என கடுமையாக அதிகாரிகளை கடிந்து கொண்டார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எண்ணத்தில் மக்கள் கொடுக்கின்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு என்பதை மறந்து விடுகிறீர்கள் எப்படி அதிகாரிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பிய மாவட்ட ஆட்சியர் வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News