அரியலூர்: உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் உறுதிமொழி.

Update: 2022-06-15 13:04 GMT

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று துவக்கி வைத்தார்.

உயிர் காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வ குருதிக் கொடையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், தேவையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரமான பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தம் சார் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து இரத்ததானம் அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் குருதி கொடையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் உலக குருதி கொடையாளர் தினம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் தன்னார்வ இரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கியும், இரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், இரத்ததான முகாம்களை துவக்கி வைத்து, கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, சுவரொட்டி போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவு தன்னார்வமாக இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் எனவும், இதன் பயனாக விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்ததுடன், குருதி கொடை வழங்கிய அனைத்து குருதி கொடையாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார். முன்னதாக, உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், துணை முதல்வர் மரு.சித்ரா, கண்காணிப்பாளர் மரு.ரமேஷ், மருத்துவ அலுவலர் மரு.குழந்தைவேலு, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீதேவி மற்றும் மருத்துவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News