பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்

நெல்கொள்முதல் நிலையங்களில் பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2022-03-03 07:51 GMT

அரியலூர் - நெல் கொள்முதல் நிலையங்களில் பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் வாங்கி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே அகில இந்திய விவசாய சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஆன்லைன் பதிவு செய்ய சொல்லி அலையவிடாமல் பழைய முறைப்படி சிட்டா, அடங்கல் விவசாயிகளிடம் இருந்து பெற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் இருந்து மூட்டைக்கு 40 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதை கண்டித்து அதனை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட முயன்ற 20 க்கும் மேற்பட்ட விவசாயிகளை திருமானூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

Similar News