அரியலூர்:108 ஆம்புலன்ஸ் மூலம் 26,344 பேருக்கு கடந்தாண்டு முதலுதவி

அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் 26,344 பேர் முதலுதவி பெற்றுள்ளனர் என மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-16 10:57 GMT

அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு (2021) 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் 26,344 பேர் முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர் என ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை அரியலூர் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 18 சேவை செய்து வருகின்றன. அவற்றின் மூலம் கடந்தாண்டு 7,876 கருவுற்ற தாய்மார்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதில் பயணத்தின் போது 23 பிரசவங்கள் ஆம்புலன்ஸில் நடந்துள்ளன. சாலை விபத்துகளில் காயமடைந்த 2,980 பேர், கரோனா தடுப்பு நடவடிக்கையின் போது 4,236 பேர், பேர். விஷம் குடித்தவர்கள் 1,299 பேர், வயிற்றுவலி, விலங்குகளால் தாக்கப்பட்டவர்கள், மாரடைப்பு, மூச்சுத்திணறல், பக்கவாதம், தற்கொலைக்கு முயன்றவர்கள் மற்றும் இதர சிறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என 9,953 பேர் என அரியலூர் மாவட்டத்தில் 26,344 பேர் முதலுதவி சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர்.

2020 ம் ஆண்டை காட்டிலும் கடந்தாண்டு 21 சதவீதம் பேர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்றார்.

Tags:    

Similar News