கரிசல் எழுத்தாளர் கி.ரா - மரணம்.
கரிசல் மக்களின் வாழ்க்கையை அவர்களின் வாழ்வியலுடன் பகிர்ந்தவர்.
கரிசல் எழுத்தாளர் கி.ரா. எனும் கி.ராஜநாராணன் தனது 99-வது வயதில் விடைபெற்றிருக்கிறார்.
கரிசல் மக்களின் வாழ்க்கையை அவர்களின் வாழ்வியலுடன் கூடிய மொழி நடையில் பதிவு செய்த மூத்த எழுத்தாளரின் மறைவு வருத்தம் அளிக்கிறது.
எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பால் நேற்று (மே.17ந்தேதி) இரவு 11மணிக்கு காலமானார்.
லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது உடல் இன்று (மே.18ந்தேதி) மாலை கருவடிக்குப்பம் இடுகாட்டிற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் காலமான கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா உடலை கோவில்பட்டி இடைச்செவலுக்கு எடுத்து செல்ல தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு கி.ரா. மகன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.