கரிசல் குயிலுக்கு அரசு மரியாதை -ஸ்டாலின் இரங்கல்.

தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!

Update: 2021-05-18 04:51 GMT


மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் காலமான கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா உடலை கோவில்பட்டி இடைச்செவலுக்கு எடுத்து செல்ல தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்..அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்.என தமிழக அரசுக்கு கி.ரா. மகன் பிரபாகரன் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நெடைபெறும் என தமிழக முதல்வர் தெரிவிததுள்ளார். அதே சமயத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து...

கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!

கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்!

அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்.

குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!

என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்


Tags:    

Similar News