12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்

12 ராசிகளுக்கான இன்றைய, ஜூன் 25 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்கள் உங்களுக்காக;

Update: 2023-06-25 01:33 GMT

பைல் படம்.

மேஷம்

இன்று புதிய வேலை வாய்ப்புகள் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் பெறுவர். வீடு, மனை, வாகனங்கள் போன்றவை உயர்வுதரும் வகையில் உருவாகும். உடல்நலமும், மனவளமும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். தங்களது ஆர்வம் மிக்க செயல்பாடுகளால் பணி வாய்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் நற்செயல்களைப் பொறுத்து நல்ல பலன்கள் பெறுவீர்கள். புகழ் தரும் வாய்ப்புகளில் ஈடுபடும் வாய்ப்புகள் உருவாகும். தாய்வழி சார்ந்த உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களுடன் நல்ல உறவு ஏற்படும். நற்காரியங்களைப் பொறுத்து பணவரவு ஏற்படும்.

மிதுனம்

இன்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறுவீர்கள். பணவரவு நன்றாகவே அமையும். ஒரு சில பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும். நண்பர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனோபாவங்கள் வளர்ச்சி பெறும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்

இன்று தந்தை வழி யோகம் சிலருக்கு கிடைக்கும் யோகம் உண்டாகும். இடமாற்றமும், தொழில் வளர்ச்சியும் உண்டாகும். ஆதாயங்கள் ஏராளமாக கிடைக்கும். அரசு அதிகாரிகள் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும். பாங்கு மற்றும் தனியார் துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் பொருளாதார வரவு செலவு கணக்கில் நற்பெயர் பெறுவார்கள்.

சிம்மம்

இன்று பொருளாதார வரவு இருந்தாலும் செலவுகளும் உண்டு. குலதெய்வ அருளும், பூர்வ புண்ணிய பலன் தகுந்த நேரத்தில் காப்பாற்றும். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதியரிடம் ஒற்றுமை சீராக இருக்கும். சிலருக்கு உத்யோகம் அல்லது இடமாற்றம் லாபத்துடன் ஏற்படும்.

கன்னி

இன்று தொழில் சிறப்பு பெற்றாலும் மனதில் நிம்மதி அற்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். விற்பனையாளர்கள் தொழிலில் உயர்வு பெறுவர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றம் பெறுவர். கடன் வாங்கும் நிலைமை ஏற்படாது.

துலாம்

இன்று தங்கள் பணியில் அதிக சுமை பெற்றாலும் நல்ல வருமானம் பெறுவர். சிறு தொழில்கள் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். மனதில் புதிய தைரியமும், செயலில் உத்வேகமும் நிறைந்திருக்கும். நடக்கப் போகும் விஷயங்களை சூழ்நிலைகள் முன்கூட்டியே உணர்த்திவிடும். நட்பு வகையிலான உதவிகள் நன்மைகளைத் தரும்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியத்துடன் ஆயுள் பலம் நிறைந்த்தாகவும் இருக்கும். திருமணம் ஆன பெண்கள் கணவருடன் ஒருமித்து வாழ்வார்கள். தந்தை வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கல் சேருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிக்கனத்தை கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும்.

தனுசு

இன்று வாகன பிரயாணங்களில் கவனம் வேண்டும். சுக சவுகரிய வாழ்க்கை கடுமையான உழைப்பினால் மட்டுமே கிடைக்கும். பிணிகள் தரும் துன்பம் விலகும். சொந்த வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவது நன்மை தரும். வார்த்தைகளில் கனிவும், பணிவும் வேண்டும். வீடு, மனை இவை வாங்குவதற்கு நல்ல நேரம். அரசியல் சார்ந்த நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று தலைமை தாங்கி துணிச்சலுடன் எதையும் செய்யும் ஆற்றல் பெறுவீர்கள். செலவு கூடும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை. முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

கும்பம்

இன்று தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை.

மீனம்

இன்று குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

Tags:    

Similar News