Om Namah Shivaya Tamil நமசிவய கூறுங்கள், நலம் யாவும் பெறுங்கள்
'ஓம் நம சிவய' என்று உச்சரிக்கும்போது மன வேதனைகள், மனக்கவலைகள் மாயமாகிப்போகும். எந்த துன்பத்தையும் நீக்க வல்ல 'ஓம் நம சிவயா' மந்திரத்தை மனதில் இருத்தி சொல்லிப் பழகுங்கள்;
நமசிவய மந்திரம்
"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் காரணமில்லாத மங்களம் என்று பொருள்.
பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.
நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும்.
மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே ஓதுதல்தான் உன்னத காரண நிலை.
"நமசிவய"
இந்த எழுத்துக்களில், ந - பிருதிவியையும், ம - அப்புவையும், சி - தேயுவையும், வ - வாயுவையும், ய - ஆகாயத்தையும் குறிக்கும்.
மனித உடம்பில் சாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம்,விசுத்தி, ஆக்ஞை என்கின்ற ஆதாரங்கள் இந்த பஞ்சபூதங்களுக்கு உரிய இடமாகும் என்கிறார் திருமூலர்.
மேலும், மனித இடம்பில் நமசிவாய என்பது, ந - சுவாதிஷ்டானதில், ம - மணிபூரகத்தில், சி அனாகதத்தில், வ - சிசுத்தியில், ய - ஆக்ஞையில் இருப்பதாக சொல்கிறார்.
திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களுக்கும் மெய்பொருளாகவிளங்குவது “நமசிவாய” இது எல்லாவற்றிற்குமான நாதன் நாமம் என்றும் சொல்கிறார்.
”நானேயோ தவம் செய்தேன் சிவயநம எனப்பெற்றேன்” என்று பஞ்சாட்சர மகிமையை மாணிக்க வாசகரும் கூறுகிறார்.
பஞ்சாட்சரத்தின் பொருளை அறிந்து உச்சரித்தால் அதிக பலன்
நம்மில் பலரும் சிவாலயங்களுக்கு செல்வதுண்டு. அங்கு நடைபெறும் யாகம், வேள்விகளில் பங்குபற்றுவதுண்டு. அங்குள்ள வேதம் படித்த சிவாச்சாரியர்கள் வேத மந்திரத்தை ஓதுவர். அதனுடன் பஞ்சாட்சர மந்திரங்களையும் ஒதுவதுண்டு. இதன் போது நம்மையும் உடன் உச்சரிக்குமாறு பணிப்பர். ஆனால் நாம் அந்த வேத எழுத்துகளின் ஒலியை மட்டும் உள்வாங்கி, அதனை நமக்கு தெரிந்த அளவில் மெதுவாக உச்சரிப்போம். ஆனால் அந்த பங்சாட்சரத்திற்கான மற்திரச் சொல்லும், அந்த மந்திரச் சொல்லிற்கான பொருளும் நமக்கும் தெரிந்திருந்தால் வேத விற்பன்னர்களுடன் நாமும் இணைந்து பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிப்போம்.
அதுமட்டுமல்ல இந்த பஞ்சாட்சர மந்திரத்தை ஒரு குருவின் ஆசியோடு கற்று, சிவாலயங்களில் நீங்கள் உச்சரிக்கத் தொடங்கினால் அல்லது மனதில் தியானித்தால் உங்களுக்கான பலன் உடனே கிட்டும்.
நங் சிவயநம - திருமணம் நிறைவேறும்
அங் சிவயநம - தேக நோய் நீக்கும்
வங் சிவயநம - யோக சித்திகள் பெறலாம்
அங் சிவயநம - ஆயுள் வளரும், விருத்தியாகும்
ஓம் அங் சிவாயநம - எதற்கும் நிவாரணம் கிட்டும்
கிவி நமசிவாய - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீம் நமசிவய - விரும்பியது நிறைவேறும்
ஐம் நமசிவய - புத்தி வித்தை மேம்படும்
நமசிவய - பேரருள், அமுதம் கிட்டும்
உங்யு நமசிவய - வியாதிகள் விலகும்
கிலிம் நமசிவய - நாடியது சித்திக்கும்
சிங் வந் நமசிவய - கடன்கள் தீரும்
நமசிவய வங் - பூமி கிடைக்கும்
சௌம் சிவாய - சந்தான பாக்கியம் ஏற்படும்
சிங் றிங் சிவயநம - வேதானந்த ஞானியாவார்
உங் றிம் சிவயநம - மோட்சத்திற்கு வழிவகுக்கு
அங் நங் சிவாய - தேக வளம் ஏற்படும்
அவ்வுஞ் சிவாயநம - சிவன் தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்
லங் ஸ்ரீம் நமசிவாய - தானிய விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவய - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங் உங் சிவய நம - வாழ்வு உயரும், வளம் பெருகும்
ஓம் ஸ்ரீம் சிவாய நம - சிர ரோகம் நீங்கும்
ஓம் அங் சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்
இனியாவது பஞ்சாட்சர மந்திரத்தின் பொருளை உணர்ந்து உச்ரிப்போம். சிவபெருமானின் ஆசியைப் பெறுவோம்.