Christmas Quotes Tamil-கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!

கிறிஸ்துமஸ் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது . இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விழாவாகும்.;

Update: 2024-02-07 13:37 GMT

christmas quotes tamil-கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கான மேற்கோள்கள் (கோப்பு படம்)

Christmas Quotes Tamil

இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை தான் வருடா வருடம் அனைவரும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம். இயேசு பிறந்த ஆண்டானது சரியாக இன்று வரை தெரியவில்லை என்பதால் கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறி வைத்துள்ளார்கள்.

Christmas Quotes Tamil

கிறிஸ்து பிறப்பு விழாவை எட்டாம் நூற்றாண்டிலிருந்து கிழக்கிந்திய சபையும் பதினோராம் நூற்றாண்டிலிருந்து மேற்கிந்திய சபையும் கொண்டாடத் ஆரம்பித்தார்கள். அந்த இனிய நாளில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் எப்படி சொல்லலாம் என்பதைக் காணலாம் வாங்க.

அன்பை மட்டுமே விதைத்து சென்ற

இயேசுபிரான் பிறந்த தினம் இன்று

நாமும் அன்பை விதைப்போம்

அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

மண்ணில் பிறந்த இறைபாலகன்

உங்களை வெற்றிகளை நோக்கி

வழி நடத்துவாராக

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Christmas Quotes Tamil

துன்பங்கள் களைந்துவிட்டு துயரங்கள்

தகர்த்துவிட விடியலென வந்துவிட்டார்

விண்ணுலக தேவனவர் அனைவருக்கும்

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

மண்ணில் வந்த விண்ணின்

வேந்தனை போற்றிப் பாடி

ஆர்ப்பரித்து அகமகிழ்ந்து

கொண்டாடுவோம்

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

மக்களோடு மக்களாய் இருக்கும்

ஏசுவின் பிறந்த நாளினை

கொண்டாடிவோம் அனைவருக்கும்

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

கவலைகள் மறந்து இன்பம் புகுந்து

நண்பர்கள் மற்றும் உறவினரோடு

இயேசு பிறந்த நாளை மகிழ்ச்சியாய்

கொண்டாட என் இதயம் கனிந்த

கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்

Christmas Quotes Tamil

நம்பிக்கைக்கும் நன்னெறிக்கும்

அடையாளமாக விளங்கும்

இந்நன்னாளில் அனைவருக்கும்

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இந்த திருநாளில் உங்கள்

வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

சிறந்த மகான் இயேசுபிரன்

சிசுவாக அவதரித்த நாள்

அனைவருக்கும் இனிய

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

அன்பு ஒன்றே தெய்வம்

என்று அனைவரையும்

வாழ்க என்று வாழ்திடுவோம்

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை

உன்னைக் கைவிடுவதுமில்லை

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

Christmas Quotes Tamil

கேட்டதும் கொடுப்பவன்

தட்டியதும் திறப்பவன் அவன்

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

மானுடர்களை இரட்சிக்க

மாட்டு தொழுவத்தில்

பிறந்தவன் அவன்

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் தாத்தாவை போல் அனைவரும்

அனைவருக்கும் உதவி செய்து மனிதநேயத்தினை

நிலைநாட்டுவோம் அனைவருக்கும் இனிய

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

கடவுளும் மனிதர்களை காண இவ்வுலகில்

மனித வடிவில் வருவார் என நம்பும்

வகையில் புனித இயேசு பூவுலகில்

மனிதராக வந்த தினம் அனைவருக்கும்

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

Christmas Quotes Tamil

கர்த்தர் மேல் உன்

பாரத்தை வைத்துவிடு

அவர் உன்னை ஆதரிப்பார்

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

மரியாளின் மைந்தனாய்

மாட்டு தொழுவத்தில் பிறந்து

மக்களின் பாவத்தை போக்க மரித்து

போரடியவரின் பிறந்தநாள் இன்று

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இந்த இனிய நாளை போலவே

எந்நாளும் உடலும் உள்ளமும்

நலமுடனும் பொலிவுடனும்

இருக்க அனைவரும் இனிய

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

இதமான இன்பம் இதயம்

வருடி இருள் விலகும் நாள்

இனிமை பிறக்கும் நாள்

இந்த இயேசு பிறந்த நாள்

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

Christmas Quotes Tamil

மண்ணுலுக மக்கள் மகிழ்ச்சி

பொங்க மனதில் இருக்கும்

ஆசையை மனமுருக வேண்டி

இறைவனின் ஆசி பெற்றிடுவோம்

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை

போற்றிப் பாடி கொண்டாடுவோம்

ஆர்ப்பரித்து அகமகிழ்வோம்

இந்த கிறிஸ்துமஸ் நன்நாளிலே

அன்பெனும் பண்புகளை

ஆணித்தரமாய் சொல்லிவிட

ஆயுளையே அவர் கொடுத்தார்

அகிலத்தின் விடுதலைக்காய்

அவர் பிறந்த நாளின்று

அறியாமை போக்கிடுவோம்

பகைமையதை மறந்திடுவோம்

பாசத்தோடு வாழ்ந்திடுவோம்

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் 

Tags:    

Similar News