தமிழக காங். தலைவர் பதவிக்கு கடும் போட்டி டில்லியில் முகாமிட்டு காய் நகர்த்தும் 5பேர்

tn congress president post competition தமிழக காங்கிரசாரின் கோஷ்டிபூசலால் அண்மையில் மோதல் நடந்தது. இதன் எதிரொலியாக தலைவரை மாற்றவேண்டும் என 5 பேர் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

Update: 2022-11-21 12:06 GMT

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

tn congress president post  competition

தமிழக காங். தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரியை பதவிநீக்கம் செய்துவிட்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என 5 பேர் கொண்ட அணி டில்லியில் முகாமிட்டு காய் நகர்த்திவருகிறது. அழகிரி பதவியைத் தக்க வைக்க அவரது ஆதரவாளர்களும் போட்டியாக முகாமிட்டிருப்பதால் என்ன நடக்கப் போகிறதோ? என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப்பூசல் இல்லாத வருஷமே இல்லை என்று சொல்லலாம். யார் தலைவராக இருந்தாலும் இந்த கோஷ்டிப்பூசல் மட்டும் நீங்கியதில்லை.இவர்களிடம் ஒண்ணா இருக்க கத்துக்கணும்...உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..காக்கா கூட்டத்தைப் பாருங்க....அப்படின்னு பாட்டு பாடினாலும் இவர்கள் ஒண்ணா இருக்கற மாதிரி தெரியலை.. தற்போது காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரிஇருந்து வருகிறார். இவரை இவர் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதில் இருந்தே மாற்ற வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தாலும்தலைமை அதனைக் கண்டுக்காமல் இவரையே தலைவராக இருக்க நீடித்ததது .

tn congress president post  competition


தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆபீஸ் சத்தியமூர்த்தி பவன் சென்னை.(கோப்புபடம்)

 tn congress president post  competition

அண்மையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழக காங்.தலைவர் அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், காங்கிரஸ் பொருளாளரும் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும்இடையே கடும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒரு சிலருக்கு மண்டை உடைந்தது.

இந்த சம்பவத்துக்கு எம்எல்ஏ தான் காரணம் எனவும், அவரோடு எஸ்சி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன் குமாரும் இந்த மாதம் 24 ந்தேதி ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் முன் ஆஜராகி அன்று நடந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

tn congress president post  competition

இந்த சம்பவம் குறித்த அனைத்து போட்டோக்கள்,வீடியோ காட்சிகளை தக்க ஆதாரங்களோடு ரூபி மனோகரனை சஸ்பெண்ட்செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதற்கானபுகாரையும் டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர் கே.எஸ் . அழகிரியின் ஆதரவாளர்கள்.

முன்னாள் தலைவர்களான தங்கபாலு,இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டசபை காங்.தலைவர் செல்வப்பெருந்தகை என 5 பேரும் ஒரே கோஷ்டியாக சேர்ந்து டில்லிக்கு சென்று எப்படியாவது மீண்டும் தலைவர் பதவியினைப்பிடிக்க முகாமிட்டுள்ளனர்.அகில இந்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜீன் கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசிவேணுகோபால்,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஆகியோரை சந்தித்து இந்த சம்பவங்கள் குறித்து பேசுவதற்காக டில்லியில் தங்கி முகாமிட்டுள்ளனர்.

tn congress president post  competition

காங்கிரஸ்மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கும்போது,

வரும் 2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தல் பணிகளை ஏற்கனவே எதிர்க்கட்சியான பாஜ துவக்கி வேலைகளை துரிதப்படுத்தியுள்ளது. அதேபோல் தற்போதைய தமிழக காங்.தலைவரான கே.எஸ். அழகிரியும் இந்த பணிகளைத் துவங்கிவிட்டார். இந்நிலையில் அவரை மாற்றினால் அழகிரியின் தேர்தல் திட்ட பணிகளில் பெரும் குழப்பந்தான் ஏற்படும். ஆகவே அவரே தலைவராக நீடிப்பதுதான் தற்போதைய நிலைக்கு சிறந்தது என நாங்கள் கருதுகிறோம்.

ஆலோசனைக்கூட்டத்தில் வாரிசுகளுக்கு எம்பி.எம்எல்ஏ பதவிகள் வாங்கிக்கொடுத்ததுகுறித்து அவர் பேசியது மூத்த தலைவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் அவர்கள் ஐந்து பேரும் டில்லி நோக்கி கிளம்பிவிட்டனர்.திருநாவுக்கரசர், ப.சிதம்பரம், ரூபி மனோகரன் ஆகிய தலைவர்கள் அனைவரும்இதன் பின் உள்ளனர். அவருடைய ஆதரவாளர்களும் அழகிரியை மாற்றவேண்டும் என கொடிபிடித்துள்ளனர்.இவர்கள் அனைவருமே தாம் ஆதரிக்கும் மூத்ததலைவருக்கு மாநில தலைவர் பதவியானது கிடைத்துவிட்டால் தங்களுடைய வாரிசுகளுக்கும் எப்படியாவது பதவியினை வாங்கிவிடலாம் என்ற மனக்கணக்கில்உ ள்ளனர்.

tn congress president post  competition

தமிழக காங்கிரஸ்தலைவர் பதவிக்கு 5 பேர் மட்டுமே போட்டியில் இல்லை. நினைத்தவர்கள் எல்லாம் போட்டி போட்டு முயற்சி செய்கின்றனர். அந்த லிஸ்டில் கார்த்தி சிதம்பரம், கரூர் எம்.பி. ஜோதிமணி, விஸ்வநாதன், நாசேராமச்சந்திரன், என பட்டியல் பெரும் பட்டியலாக நீளுகிறது. இவர்களும் டில்லியில் பதவியைப் பிடிக்க காய் நகர்த்தி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ? எப்படி வேண்டுமானாலும் இருங்க.. ஆனால் லோக்சபா தேர்தலின்போதும் இதேபோல் கோஷ்டிகளாக இருந்தீர்கள் என்றால் தமிழகத்தில் எப்படி வெற்றி பெறுவீர்கள் என்பதை மட்டும் உங்கள் சிந்தனையில் நிலைநிறுத்துங்க என்று கட்சியின் தொண்டர்கள் ஓங்கி குரல் கொடுத்து வருகின்றனர். 

Tags:    

Similar News