சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் யோசனை!

சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அம்மா சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

Update: 2021-06-09 06:27 GMT

அன்புமணி ராமதாஸ்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட தகவலில், தமிழ்நாட்டில் சிமெண்ட விலை கடந்த சில நாட்களாக ரூ.370லிருந்து ரூ.520ஆக உயர்ந்துள்ளது. இது கட்டுமான தொழிலை நேரடியாகவும், கட்டுமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் பாதிக்கும்.

ஊரடங்கு காரணமாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவறு. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைப்படவில்லை. தேவை குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் விலை உயர்ந்திருப்பது விநோதம்.

சிமெணட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218என்ற முறையில் அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

Similar News