Prunes Meaning in Tamil நீண்ட காலமாக நாம் புறக்கணித்த உலர் பழமான கொடிமுந்திரி எனற உலர்பிளம்ஸ்

கொடிமுந்திரி என்பது பிளம்ஸ் ஆகும், அவை எந்த நொதித்தல் செயல்முறையிலும் ஈடுபடாமல் இயற்கையாக வெயிலில் உலர்த்தப்படுகின்றன;

Update: 2024-01-04 05:48 GMT

கொடிமுந்திரி என்ற உலர் பிளம்ஸ்

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பழங்களில் கொடிமுந்திரிக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. கொடிமுந்திரி என்பது பிளம்ஸ் ஆகும், அவை எந்த நொதித்தல் செயல்முறையிலும் ஈடுபடாமல் இயற்கையாக வெயிலில் உலர்த்தப்படுகின்றன

கொடிமுந்திரி என்பது ஊட்டச்சத்துக்களின் சக்தியாக உள்ளது மற்றும் அவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பது உங்களுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.

கொடிமுந்திரியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. நாள்பட்ட மலச்சிக்கல் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் மூலநோய்க்கும் வழிவகுக்கும். நார்ச்சத்துக்கு அற்புதமான ஆதாரமாக உள்ள கொடிமுந்திரியில் வேறு பல சத்துக்களும் உள்ளன. அவை ஆரோக்கியத்தை வலுப்படுத்துகின்றன.


நார்ச்சத்தின் அவசியம்

பெண்களுக்கு நாளொன்றுக்கு 28 கிராம் நார்ச்சத்து தேவை என்றால், ஆண்களுக்கு 34 கிராம் நார்ச்சத்து தேவை. நார்ச்சத்துள்ள உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.

கொடிமுந்திரி பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும், இது பல்வேறு முக்கிய உடல் செயல்பாடுகளுக்கு உதவும் எலக்ட்ரோலைட் ஆகும். செரிமானம், இதயத்துடிப்பு, நரம்பு தூண்டுதல்கள் மற்றும் தசை சுருக்கங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.

நமது உடல் பொட்டாசியத்தை இயற்கையாக உற்பத்தி செய்யமுடியாது. எனவே, கொடிமுந்திரியை அப்படியே சாப்பிடலாம், அல்லது அதன் ஜூஸ் குடித்தால், உடலுக்கு தேவையான பொட்டாசியம் கிடைத்துவிடும். உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்க உதவும்.

எலும்பு அடர்த்தியில் தாக்கத்தை உண்டு செய்ய அத்திப்பழங்கள், பேரீச்சம்பழங்கள், உலர் திராட்சைகளுக்கு மத்தியில் உலர்ந்த பிளம்ஸ் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. அனைத்து பழங்களும் காய்கறிகளும் ஊட்டச்சத்துகளை அளிப்பவை என்றாலும் எலும்பு ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த உலர் பிளம்ஸ் முக்கியமானது.

இந்த பழம் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், இரும்பு மற்றும் ரெட்டினோல் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சக்தியாக நிரம்பியுள்ளது. இதில் வைட்டமின் கே நிறைந்துள்ளது மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. ஒரு கப் உலர் பிளம்ஸில் தோராயமாக 23 கிலோகலோரி மற்றும் 0.7 கிராம் நார்ச்சத்து உள்ளது.

ஒரு கப் உலர் பிளம்ஸ் எடுத்துகொள்வது தினசரி அளவில் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் கே உட்கொள்ளலை 87% வைட்டமின்களில் பி வைட்டமின் ஆனது 20% அதிகமானவை. மேலும் இதில் 8% கால்சியம் மற்றும் 27% பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகிறது.


இந்த கொடிமுந்திரி எனப்படும் உலர் பிளம்ஸ் நன்மைகள் என்னென்ன என்பவை குறித்து பார்க்கலாம்.

100 கிராம் கொடி முந்திரியில் 240 கிலோகலோரி, 2.18 கிராம் புரதம், 7. 1கிராம், ஃபைபர் மற்றும் சுமார் 63.88 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

பார்வையை மேம்படுத்துகிறது

ஆரோக்கியமான பார்வைக்கு அவசியமான வைட்டமின் ஏ சிறந்த மூலமாகும். வைட்டமின் ஏ பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 3 % இது அளிக்கிறது. வைட்டமின் ஏ குறைபாடுள்ளவர்கள் மாலைக்கண் நோய், மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வைட்டமின் குறைபாட்டை நீக்க உலர் பிளம்ஸ் உதவுகிறது.

உலர் பிளம்ஸ் மாங்கனீசு, இரும்பு மற்றும் தாவர பினோலிக்ஸ் உள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. மேலும் உயிரணு சவ்வுகளை ஃப்ரீ ரேடிக்கல்ஸிலிருந்து சேதத்தை பாதுகாக்க செய்கின்றன.

உலர் பிளம்ஸில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது முக்கியமான கனிமமாகும். இது உடல் முழுவதும் இதயத்தின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. உடல் முழுவதும் நரம்புகள் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது.

இரத்த அழுத்தத்திற்கு 

பொட்டாசியம் தினமும் உடலுக்கு செல்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் தலைச்சுற்றல், இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கிறது.


மலச்சிக்கலுக்கு தீர்வு

பல ஆண்டுகளாகவே மலச்சிக்கலை தீர்க்கும் மருந்தாக உலர் பிளம்ஸ் செயல்படுகிறது. உலர் பிளம்ஸ் உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. மலச்சிக்கலை போக்கவும் வழக்கமான குடல் இயக்கத்தை கொண்டுள்ளது. இது நார்ச்சத்து மற்றும் சர்பிடாலை அதிகம் கொண்டுள்ளது.

தினசரி நார்ச்சத்தில் 3% வழங்குகிறது. கொடி முந்திரிகளில் இருக்கும் இயற்கையான சர்க்கரை சர்பிடால் மலமிளக்கியாக செயல்படுகிறது. இது ஈரப்பதத்தை செரிமான மண்டலத்துக்கு இழுத்து குடல் இயக்கத்துக்கு உதவுகிறது.

முடி ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது

முடி உதிர்தல் வறட்சி மற்றும் முடியின் நிறமாற்றம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்ய இரும்புச்சத்து நிறைந்த உலர் பிளம்ஸ் உதவக்கூடும். இது தலைமுடியின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடும்.

இது வைட்டமின் பி, வைட்டமின் சி கொண்டவை. இந்த ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை வேர்களிலிருந்து வலுப்படுத்தி உடைப்பு மற்றும் சேதத்தை தடுக்கின்றன.

சருமத்துக்கு சிறந்தது

உலர் பிளம்ஸில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகின்றன. இந்த பழம் வயதான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும் சரும சுருக்கங்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. இதில் பல தாதுக்கள் இருப்பதால் இது நல்ல சிற்றுண்டி என்று சொல்கிறது. இது சருமத்தை மிளிர செய்கிறது.

முன்னெச்சரிக்கை 

உலர் பிளம்ஸ் நல்லது என்று சொன்னாலும் அதை அளவுக்கு மீறி எடுக்க கூடாது. இதில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. அதனால் எடையை பராமரிப்பவர்களுக்கு இது நல்லதல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக இது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இதில் உயர்ந்த ஊட்டச்சத்து மதிப்புகள் இருந்தாலும் அளவாக எடுத்துகொள்வது நல்லது.

என்றாலும், நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நிலைமைகள் இருப்பவர்கள் கொடிமுந்திரிகளைத் தவிர்க்க வேண்டும்.

Tags:    

Similar News