நம்மை நாம் அறிவோம்! வேறு யார் அறிவார்?

Life Philosophy Quotes in Tamil-தத்துவம் என்பதற்குப் பொதுவான ஒரு இலக்கணம் என்று ஏதுமில்லை. தாம் மெய்யாக உணர்ந்தவற்றை, துய்த்தவற்றைக் கூறுவது தத்துவவியல்.

Update: 2022-09-21 09:27 GMT

Life Philosophy Quotes in Tamil

Life Philosophy Quotes in Tamil

கீழை நாட்டினரும், மேலைநாட்டினரும் இருவேறு தத்துவ அணுகுமுறைகளைக் கொண்டிருந்ததை வரலாறு உரைக்கிறது.

ஆசிய நாடுகள் மனதின் உள்ளே கவனம் குவிக்க சொல்கிறது. நம்மைச் சூழ்ந்துள்ள எல்லையற்ற கால-வெளி பேரண்டத்தின் ஒரு அங்கமாக நாம் அங்கே திளைத்திருப்பதைக் காட்டுகிறது. சில தத்துவநெறிகள் , பேரண்டம் முழுதும் நிறைந்திருக்கிற பரம்பொருளுடன் ஒன்ற வழிகள் காட்டுகிறது.

ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகள், நேரடியாக பூமிக்கு அப்பால் என்னவிருக்கிறது என்று கேள்வி கேட்டுக் கொண்டார்கள். புறச்சூழலில் நடப்பவற்றை அவர்கள் கவனத்தில் கொண்டார்கள். தனிமனித நடத்தை, எண்ணங்கள் குறித்து உரையாடல் மேற்கொண்டனர்.

இருவேறு அணுகுமுறைகளும் தமக்கே உரித்தான நிறை,குறைகள் உள்ளவை. ஒருமனிதன் இவ்விரண்டுக்குமிடையே உள்ள சமச்சீர்மையைப் பேணிக் காத்தால், வாழ்வில் உயரலாம்!.

உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி "கடவுள் என்பவர் யார்?" எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர்.

''எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி'' என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.

உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்: பிளாட்டோ

மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்சிந்தனையோடு வாழ வேண்டும்: அரிஸ்டாட்டில்

மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்: டார்வின்

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை.

மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

தனியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.

கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும்

கவனமாக இருக்க வேண்டும்

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது: அரிஸ்டாட்டில்.

ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால் பின் அவனைப் பற்றி அறிதல் கடினமானதன்று: ஹோம்ஸ்

தோல்வி என்பது தள்ளிப் போடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான் அதில் உற்சாக இலக்கு ஒன்றுமில்லை: சுவாமி சுகபோதானாந்தா

சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்: ராமதாசர்

மனிதனை மனிதனாக்குவது உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களும்தான்.

சிந்திக்காமல் படிப்பது வீண், படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது: கன்பூசியஸ்

அறிவாளிகள் காசுக்கு அடிமையாக இருப்பதால் நம் அறிவை விலை கூறுகின்றனர்: சுவாமி விவேகானந்தர்

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது: ஆலன் ஸ்டிரைக்

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்: லியோ டால்ஸ்டாய்

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்: சார்லஸ்

உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வரவேண்டும். -மான்ஸ்பீல்டு

நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான். -ஜான்மில்டன்

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும் - முகம்மது நபி

வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது: கீர்கே கார்ட்

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை: மகாகவி பாரதியார்

நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை: சுவாமி மித்ரானந்தா.

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து: ஆபிரஹாம் லிங்கன்.

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்: பிராங்க்ளின்

ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்: பெர்னாட்ஷா.

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன -நபிகள் நாயகம்

எவன் ஒருவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது.: ஜேம்ஸ் ஆலன்

நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது: புத்த பகவான்


உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்: பிளாட்டோ

மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்சிந்தனையோடு வாழ வேண்டும்: அரிஸ்டாட்டில்

மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்: டார்வின்

தோல்வியின் அடையாளம் தயக்கம்!

வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை!!

தயங்கியவர் வென்றதில்லை


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News