அடேங்கப்பா! மொச்சையில இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Edamame Beans in Tamil-பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இதை பற்றி நாம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை
Edamame Beans in Tamil-இந்தியாவில் பல காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் முக்கியமான உணவு பொருட்களில் ஒன்று மொச்சை. சோயா வகையை சேர்ந்த ஒன்றாக கருதப்படும் இது ஜப்பானில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. புரோட்டின், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள், மக்னீசயம், இரும்புசத்து, பொட்டாசியம், ஜிங்க் மற்றும் குறைவான சர்க்கரை என்று இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கை ஏராளமாகும்.
மொச்சையில் கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன. இது போல பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இதை பற்றி நாம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை.
இந்த பதிவில் மொச்சையின் பயன்கள் என்னென்னே என்று பார்க்கலாம்.
இதய ஆரோக்கியம்
மொச்சையில் இருக்கும் ஐசோபிளேவோன்கள் இரத்தக் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய் வராமல் குறைகிறது. இதய ஆரோக்கியத்திற்கு அவசியமான ஃபோலியேட் மற்றும் வைட்டமின் கே இதில் அதிகம் உள்ளது.
சக்தி வாய்ந்த எலும்புகள்
மொச்சையில் உள்ள ஐசோபிளேவோன்கள் எலும்புகளை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்ற உதவுகிறது. எனவே எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து இது பாதுகாக்கிறது.
சரும நன்மைகள்
சருமம் உடலின் ஒரு முக்கியமான அங்கமாகும். அது வானிலை மற்றும் மருத்துவம் போன்ற சூழ்நிலையினால் சேதமடைகிறது. மொச்சையை உண்பதால் சருமத்தின் அடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் செயல்பாட்டை இது அதிகரிக்கிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் போன்றவற்றை தடுத்து, மிகவும் ஆரோக்கியமான தோற்றத்தை பெறச் செய்கிறது.
இரத்த அழுத்தம்
உடலுக்குள் சமநிலையை நிர்வகிப்பதற்கு சோடியம் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். ஒரு கப் மொச்சையில் 38 மி. கி சோடியம் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது. மொச்சைக் கொட்டை போன்ற தாவர அடிப்படையிலான பொருட்கள் பொதுவாக சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருக்கும்.
இரத்தசோகையை தடுக்கிறது
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தசோகை, சோர்வு, தசை பலவீனம், மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது மொச்சையில் உள்ள அதிகமான ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது..
ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள்
மொச்சையில் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், கீல்வாதம் அல்லது முடக்கு வாதம் போன்ற வேறு ஏதேனும் வீக்கம் தொடர்பான பிரச்சினகளுக்கு இதை உட்கொள்வது சிறந்த உணவாக இருக்கும். மூச்சுத்திணறல் மற்றும் இருமல் போன்ற பிரச்சனைக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். சுவாசப் பாதையில் உள்ள வீக்கத்தை குறைக்க இது உதவுகிறது.
புற்றுநோய்க்கு எதிரான நன்மைகள்
புற்று நோயைத் தவிர்ப்பதில் மொச்சைக்கு முக்கிய பங்கு உள்ளது. இது ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெண்களில் மார்பக புற்றுநோய் தடுக்க உதவுகிறது.
எடை இழப்பு
உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் மொச்சகொட்டையின் பயன்பாடு மதிப்புமிக்க ஒன்றாக இருக்கும். சரியான உணவை உட்கொள்வது எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அதிக புரதம் மற்றும் குறைவான கலோரிகள் உள்ளது. மொச்சை கொழுப்பின் அளவை குறைக்க உதவும் அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. இதனால் நம் உடலில் அதிக கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
நுண்ணுயிரிகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தி அவசியம். இதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
நீரிழிவு நோயைக் குறைக்கிறது
மொச்சையில் கிளைசெமிக் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, மேலும் இது இரத்த குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் புரதச்சத்தும் இதில் நிறைந்துள்ளது.
வகை -2 நீரிழிவு நோய்க்கு மொச்சை பயனுள்ளதாக இருக்கும். இது வளர்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்தவும் கல்லீரலுக்குள் இன்சுலின் உற்பத்தி செய்யவும் உதவுகிறது. உடல் குளுக்கோஸைக் கட்டுப்படுத்த இன்சுலின் நன்றாக வேலை செய்கிறது. எனவே, மொச்சையை உணவில் சேர்ப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
செரிமானம்
நீங்கள் சந்திக்கும் குடல் பிரச்சனைகள் மற்றும் வீக்கம் கூட மொச்சையை உட்கொள்வதன் மூலம் தவிர்க்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆரோக்கியமான செரிமானப் பாதையைக்கு இது வழிவகுக்கிறது. இது செரிமான செயல்பாட்டை அனுமதிக்கும் ஃபைபர் பெறுவதற்கான ஒரு சிறந்த முறையாகும்.
அப்புறம் என்னங்க? டிசம்பர்ல மொச்சை சீசன் ஆரம்பிச்சாச்சு. நிறைய வாங்கி சாப்பிட்டு உடலை ஆரோக்கியமா வெச்சுக்கோங்க.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2