உணவிற்காக அதிக அளவில் பயன்படும் மடவை மீனின் வகைகள் பற்றி தெரியுமா?

Mullet Fish in Tamil -கடல்வாழ் உயிரினங்களில் பல வகைள் உள்ளன. அதில் ஒரு வகை மடவை மீன். இந்த வகை மீன்கள் மீன் வளர்ப்பு பண்ணைகளிலும் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Update: 2022-09-04 12:18 GMT

சிவப்பு நிற மடவை மீன்கள்.

Mullet Fish in Tamil -சாம்பல் நிற மடவை மீன்கள். 

முல்லெட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வகை மீன்கள் பெரும்பாலும்  மீன் வளர்ப்பு பண்ணைகளிலும் அதிகம் உற்பத்தியாகிறது. மேலும் இதில்  க்ரே, மற்றும் சிவப்பு நிறம் காணப்படுகிறது. இரு கலர்களில் இவை உற்பத்தி செய்யப்படுறகிறது.

சாம்பல் நிற மடவை என்பது மடவை இனத்தைச் சேர்ந்த முக்கியமான மீன் இனம் ஆகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய கடலோர நீர்ப்பகுதிகளில் காணப்படுன்றனஇவை சராசரியாக 30 முதல் 75 செ.மீ.கள் வரை வளரக்கூடியவை ஆகும். இவற்றின் உடலில் ஆறு முதல் ஏழு நேர்க்கோடுகள் வரை காணப்படும்.

சாம்பல் நிற மடவை மீனின் பின்புறம் ஆலிவ்-பச்சை நிறமாகவும், பக்கங்கள் வெள்ளி நிறமாகவும், வயிற்றுப் பகுதி வெண்மை நிறமாகவும் இருக்கும்மீனில் ஆறு முதல் ஏழு தனித்துவமான பக்கவாட்டு கிடைமட்ட கோடுகள் இருக்கலாம். உதடுகள் மெல்லியதாக இருக்கும்இந்த மடவையில் பக்கவாட்டு கோடு இல்லை. பொதுவாக இதன் நீளம் சுமார் 50 சென்டிமீட்டரும் (20 அங்குலம்), அதிகபட்ச நீளம் 100 சென்டிமீட்டரும் (39 அங்குலம்) ஆகும். இது அதிகபட்சமாக எட்டு கிலோகிராம் (18 பவுண்ட்) எடை வரை வளரும்

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிசுகே விரிகுடா மற்றும் நோவா இசுகோடியா வரையும்அனைத்து கடல்களின் வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலம் உள்ளிட்ட அனைத்து கடலோர நீரில் இந்த சாம்பல் நிற மடவை காணப்படும்இது 0–120 மீட்டர் (0–394 அடி) வரை ஆழத்திலும், 8–24 °C (46–75 °F) வெப்பநிலையிலும் நன்னீர், உவர்நீர் மற்றும் கடல் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ளது

சாம்பல் நிற மடவை என்பது உலகெங்கிலும் உள்ள ஒரு முக்கியமான உணவு மீனாகும். மேலும் இவை மீன்பிடி மற்றும் வளர்ப்பு மூலம் பெறப்படுகிறது. 2012ஆம் ஆண்டில் உலகளவில் மீன்பிடித்தலில் 130,000 கிலோ மீன்வளம் மூலமும் மீன்வளர்ப்பு உற்பத்தியில் 142,000 கிலோ பெறப்பட்டது

இந்த வகை கிரே முல்லட் மீன்களை பொதுவாக மடவை என்று தமிழில் அழைப்பர். திருதா என்று மலையாளத்திலும், கதிபரேகா அல்லது மாலா என்று தெலுங்கிலும் அழைக்கப்படும் ஒரு வகையான வளர்ப்பு மீன் இது. ஆரம்ப காலத்தில் மைக்ரா ஆல்கேவை இதற்கு உணவாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஐசிஏஆர் மற்றும் சிஐபிஏ சார்பில் அளித்துள்ள செய்திக்குறிப்பில், இவ்வகை மீன்கள் கிலோ ஒன்றுக்கு ரூ. 350 ல் இருந்து ரூ. 500 வரை விற்கப்படுகிறது. மேலும் இவ்வகை முல்லெட்இன மீன் வகைகள் ஒரு ஹெக்டேருக்கு 3.5 முதல் 4 டன் வரையிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

கிரே முல்லட் குஞ்சு தயாரிப்பினை அதிகப்படுத்த விவசாயிகள் மற்றும் மாநில அரசுகளுடன் ஒத்துழைப்புடன் சிஐபிஏ முழு மூச்சுடன் இயங்கி வருகிறது. பொதுவாக உவர்தண்ணீர் கொண்ட அக்குவா கல்சர் பார்மில் இவை நன்கு வளர்கின்றன.

முதன் முதலாக கிரே முல்லட் இன வகை மீன்கள் உற்பத்தியானது 1960 ம் ஆண்டில் தைவானில் நடந்தது. பின்னர் ஹவாலி, அமெரிக்கா, இஸ்ரேல், இத்தாலி, எகிப்து, மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் கருவாடு உற்பத்தியானது அதிகளவில் நடந்தது.

இந்தியாவில் 1980 ல் இவ்வகை மீன்களின் உற்பத்தியானது இனப்பெருக்க முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவைப்பொறுத்தவரை இவ்வகை மீன்களின் இனப்பெருக்க காலம் என்பது ஜூலை மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் மற்றும் நவம்பர் தென் கிழக்கு பருவகாலம் ஆ கிய காலங்களில் தண்ணீ்ரின் வெப்பநிலையானது குறைந்த அளவே தான் இருக்கு



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News