நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: ஆட்சியை தக்க வைத்தார், ஏக்நாத் ஷிண்டே..!

Eknath Shinde Election Result - மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.

Update: 2022-07-04 07:01 GMT

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்னாத் ஷிண்டே.

Eknath Shinde Election Result - மகாராஷ்டிரா சட்டசபையில் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் ஆட்சியை கவிழ்த்தனர். உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றார். முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வர் ஆனார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள சபாநாயகர் பதவி தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவும் சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்ற பிறகு சட்டசபை முதல் முறையாக நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இதையடுத்து சபாநாயகர் தேர்தலில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வால் பொறுப்பு சபாநாயகராக இருந்து புதிய சபாநாயகர் தேர்தலை நடத்தினார். முடிவில் சபாநாயகர் தேர்தலில் 271 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதில் பா.ஜனதாவின் ராகுல் நர்வேக்கர் 164 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த பின்னணியில், இன்று மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே 164-99 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே 3 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News