பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!

தனது கணிதப்பாட ஆசிரியை பிச்சையெடுத்ததை கண்ட மாணவி கண்ணீர் விட்டதோடு, அவரை பாதுகாத்து வருகிறார்.

Update: 2024-05-04 05:06 GMT

ஆசிரியை பூர்ணிமா மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட படம் (பழைய படம்)

இந்த செய்தி கொஞ்சம் பழையது என்றாலும், குருவுக்கு செய்யும் மரியாதையை நினைவுறுத்தும் மறக்கமுடியாத நெகிழ்ச்சி சம்பவம் ஆகும். 

செய்திக்குள் உள்ள இந்த புகைப்படத்தில் இருக்கும் ஆசிரியை பூர்ணிமா. அவர் கேரளாவில் உள்ள மலப்புரத்தில் கணித ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஒரு நாள் பூர்ணிமா ஆசிரியையிடம் படித்த மாணவி ஒருவர் ரயில் நிலையம் அருகில் பெண்மணி ஒருவர் பிச்சை எடுப்பதை உற்று நோக்கியுள்ளார். அருகில் சென்று பார்த்த பின்பு தான் தெரிந்தது, பிச்சை எடுப்பது தனக்கு கணிதப்பாடம் எடுத்த  தனது ஆசிரியை என்று.

அந்த மாணவி ஆசிரியரிடம் பேசிய போது, ​​"நான் ஓய்வு பெற்ற பிறகு என் குழந்தைகள் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். அன்றிலிருந்து தங்குவதற்கு இடமில்லாமல் ரயில் நிலையத்தின் முன்னால் இப்படி பிச்சை எடுக்க ஆரம்பித்தேன் " என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.


அந்த மாணவி அழுதபடி ஆசிரியரை  வீட்டிற்கு அழைத்துச் சென்று நல்ல ஆடை, உணவு கொடுத்து, தங்கவைப்பதற்கு திட்டமிட்டார். பின்னர் அந்த மாணவியுடன்  படித்த ஒவ்வொரு பள்ளி நண்பரையும் தொடர்பு கொண்டு, ஆசிரியையின் நிலையை கூறி  ஆசிரியைக்கு தேவையான உதவிகளையும் தங்குவதற்கு தேவையான இட வசதியும் செய்து கொடுத்துள்ளனர்.

அவர்களுடைய சொந்த குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற்றினாலும், ஆசிரியை கற்பித்த குழந்தைகள் தக்க நேரத்தில் உதவியுள்ளனர். இதுதான் ஒரு மாணவன், ஒரு மாணவி தன் குருவுக்கு செய்யும் தலையாய கடமை. 

இந்த சம்பவம் பழையது என்றாலும் மீண்டும் குருவுக்கு செய்யும் மரியாதையை எல்லோரும் நினைத்துப் பார்ப்பதற்கும், மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மீது பணிவும் மரியாதையும் ஏற்படவும் இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும். 

Tags:    

Similar News