நாகரிக உலகில் ஏற்படும் துன்பங்களைத் தீர்க்கும் நல்ல மருந்து விபாசானா:பிரதமர் மோடி பேச்சு

PM Modi Mumbai Speech இந்திய மக்கள் அனைவருமே தினந்தோறும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் மனஅழுத்தத்திற்கான வடிகால்தான் விபோசானா என்ற தியான பயிற்சி என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Update: 2024-02-05 12:11 GMT

வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி. (கோப்பு படம்)

  PM Modi Mumbai Speech

நாட்டில் தற்போதைய நவீன வாழ்க்கை முறையினால் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் துன்பங்களைப் போக்குவதில் நம் பண்டைய பாரதம் அளித்த மிகப்பெரும் கொடைதான் விபாசானா தியானமுறை என பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

புத்தரால் 2500 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டது தான் விபாசான தியான முறையாகும். தன்னைத் தானே அறிதல், தனக்குள்ளே ஒருங்கே சேருவ தை உணர்த்திய இந்த தியான முறையின் ஆசிரியரான எஸ்.என். கோயங்காவின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவானது நேற்று மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில் நடந்தது.

இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது,

நம் பண்டைய பாரதமானது நமக்கு பல பெரிய பொக்கிஷங்களை அளித்துள்ளது. அதில் முக்கியமானது யோகா. நம்முடைய கோரிக்கையை ஏற்று யோகாவுக்காக சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.அதுபோல் தியானம் மற்றும் விபாசனாவும் நமக்கு கிடைத்த மிகப் பெரும் பரிசுகள். தியானம் மற்றும் விபாசனா என்பது மிகவும் கடினமான ஒன்று என்று பலரும் நினைக்கின்றனர். இது அறிவியல் பூர்வமானது.

நம் மனது, உடல், அறிவை ஒருங்கிணைக்கும் சிறந்த பயிற்சியாகும். மேலும் தற்போது பரவலாக பேசப்படும் தனிநபர் மேம்பாட்டுக்கான ஒரு சிறந்த பயிற்சி முறையாகும்.தற்போதைய நவீன வாழ்க்கை முறையினால் ஏற்படும் மனஅழுத்தம் மற்றும் துன்பங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதை மிகச் சுலபமாக செய்ய முடியும்.

புத்தரால் உருவாக்கப்பட்ட இந்த தியான முறைக்கு சரியான பாதையைக் காட்டியவர் விபாசனா குரு எல்.என். கோயங்கா. நம் சமூகத்தில் மறக்கடிக்கப்பட்ட நம் பாரம்பரியங்களில் இதுவும் ஒன்று. அதை மீட்டெடுத்து, வாழ்க்கை முறையை எளிதாக்க அனைவரும் இதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று அவர் பேசினார். 

Tags:    

Similar News