எல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்: வழிதவறிய பாக்., சிறுவனை ஒப்படைத்த இந்திய வீரர்கள்..!

சர்வதேச எல்லையில் வழிதவறி இந்தியப்பகுதிக்குள் நுழைந்த 3 வயது சிறுவனை பாதுகாப்பு படைவீரர்கள் நேர்மையாக பாகிஸ்தான் படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் சிறுவனின் தந்தை ஆனந்த கண்ணீர் சிந்திய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

Update: 2022-07-03 06:25 GMT

இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்கள்.

பஞ்சாப் மாநிலத்தில், பெரோஸ்பூர் பாகிஸ்தான் நாட்டின் அருகே சர்வதேச எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதி அருகே பாகிஸ்தான் பகுதியில் 3 வயது சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தான். இதன்பின்னர். விளையாட்டு கவனத்தில் நேற்று இரவு 7 மணியளவில் அவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்து விட்டான்.

இதனால் பரிதவித்த சிறுவன் வீட்டிற்கு செல்வதற்கு வழி தெரியாமல் பயத்தில் சத்தமிட்டு அழுதுள்ளான். இதனை பார்த்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அவனை மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை முன்னிலையில் பாகிஸ்தான் ப்டையினரிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.

இதற்கிடையில் மகனை காணாமல் பரிதவித்த அவனது தந்தை, இந்திய வீரர்கள் நேர்மையாக ஒப்படைத்ததை கண்டும், மீண்டும் மகனை பார்த்ததாலும் நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்தினார். இந்த சம்பவம் இந்திய படை வீரர்கள் மதிப்பை எல்லைப்பகுதியில் உள்ள பாகிஸ்தானியர்களிடம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News