மாற்றுப்பாதையில் இயக்கப்படும் தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில்

தாதர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-09 12:16 GMT

யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் நெரிசலைத் தவிர்க்க, யஸ்வந்த்பூர் பைபாஸ் வழியாக சில ரயில்கள் திருப்பி விடப்படும் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், இந்த ரயில்கள் யஸ்வந்த்பூர் மற்றும் பானஸ்வாடி ரயில் நிலையங்களை புறக்கணிக்கும். மாற்றங்கள் விபரம்-

ரயில் எண்.11021 தாதர் -திருநெல்வேலி ட்ரை-வாராந்திர எக்ஸ்பிரஸ் (தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக) சிக்க பாணாவர ஜே.என்., யஸ்வந்த்பூர் பைபாஸ், லோட்டேகொல்லஹள்ளி மற்றும் பையப்பனஹள்ளி வழியாக இயக்கப்பட்டு, யஷ்வந்த்பூர் மற்றும் பன்ஸ்வாடி ரயில் நிலையங்களில் நிறுத்தத்தை தவிர்த்து இயக்கப்படும். இந்த திசைதிருப்பலைக் கருத்தில் கொண்டு, சிக்க பனாவர ஜெஎன் மற்றும் எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையங்களில் மாற்று நிறுத்தங்கள் வழங்கப்படும். இந்த மாற்றுப்பாதை 25.06.2024 அன்று தாதரில் இருந்து புறப்படும் ரயிலில் இருந்து நடைமுறைக்கு வரும்.

இதேபோல் மறு மார்க்கமான ரயில் எண்.11022 திருநெல்வேலி- தாதர் ட்ரை-வாராந்திர எக்ஸ்பிரஸ் (கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி வழியாக) பையப்பனஹள்ளி, லொட்டேகொல்லஹள்ளி, யஸ்வந்த்பூர் பைபாஸ் மற்றும் சிக்க பானாவர ஜே.என். வழியாக திருப்பி விடப்படும். இந்த திசைதிருப்பலைக் கருத்தில் கொண்டு, SMVT பெங்களூரு மற்றும் சிக்க பனாவர ஜேஎன் ரயில் நிலையங்களில் மாற்று நிறுத்தங்கள் வழங்கப்படும். இந்த மாற்றுப்பாதை 27.06.2024 அன்று திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரயிலில் இருந்து அமலுக்கு வரும்.

இதனை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News