அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்: மீட்புப் பணிகள் தீவிரம்

Army Helicopter Crash -அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில் உள்ள மிக்கிங் அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Update: 2022-10-21 06:46 GMT

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி

Army Helicopter Crash -அருணாச்சல பிரதேசத்தி சியாங் மாவட்டத்தில் உள்ள மிக்கிங் கிராமம் அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர், ஹெச்ஏஎல் ருத்ரா என்றும் அழைக்கப்படும் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் மிக்கிங் அருகே விபத்துக்குள்ளானதை அடுத்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ருத்ரா என்பது இந்திய ராணுவத்திற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்த தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகும். இது துருவ் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரின் (ALH) ஆயுத அமைப்பு ஒருங்கிணைந்த (WSI) Mk-IV வகையாகும்.

இந்த மாத தொடக்கத்தில், அருணாச்சல பிரதேசத்தில் தமாங் அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 'சீட்டா' ஹெலிகாப்டரில் இருந்த ஒரு விமானி உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார். 




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News