நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்

நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் ரோகிணி நிலேகனி என்ற இந்த பெண்மனி தான் நம்பர் ஒன் ஆக உள்ளார்.

Update: 2024-05-12 09:50 GMT

ரோகிணி நிலேகனி.

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் தான் நன்கொடை வழங்குவதிலும் முன்னணியில் உள்ளனர்.அந்த வரிசையில் நாட்டில் நன்கொடையில் நம்பர் ஒன் பெண்மணியாக திகழ்பவர் யார் தெரியுமா? ரோகிணி நிலே கனிதான்.


இவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் பல சமூக நலப் பணிகளுக்காக சுமார் 120 கோடி நன்கொடை அளித்துள்ளார். இது 2023 ல் 170 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. எழுத்தாளரான ரோகிணி நிலே கனி சுற்றுச்சூழல் மற்றும் கல்வித்துறை பணிகளில்  தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் நந்தன் நிலே கனி.

தற்போது ஒரு 6 லட்சத்து 19 ஆயிரம் கோடி சந்தை மூலதனத்தை கொண்ட பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் ஆவார். மும்பையில் பிறந்த ரோகிணி எல்பின்ஸ்டன் கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பிறகு அவர் ஒரு பத்திரிகையாளராக பணியாற்ற தொடங்கினார் ரோகிணியும் நந்தன் நிலேகனியும் 1981 ஆம் ஆண்டு ஆறு மென்பொருள் பொறியாளர்களுடன் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவினர். ரோகிணி அப்போது தன்னிடம் இருந்த ரூபாய் பத்தாயிரத்தை வழங்கியதாக கூறுகிறார்.


ரோகிணி நிலேகனி தற்போது ரோகிணி நிலேகனிஅறக்கட்டளையின் பொறுப்பாளராகவும் உள்ளார். மேலும் பிரதம் புக்ஸ் என்ற லாப நோக்கற்ற குழந்தைகள் நிறுவனம் உள்ளிட்டவற்றையும் நடத்தி வருகிறார்.

இவரது கணவர் நந்தன் நிலேகனி இந்திய மக்களுக்கான ஆதார் அட்டையை உருவாக்கி கொடுத்தவர் என்பது கூடுதல் தகவல் ஆகும். இவர் நடத்திய சாப்ட்வேர் நிறுவனம் தான் ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்து உள்ளது.

Tags:    

Similar News