2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தலா? ஒரே நாடு.... ஒரே தேர்தல் அமலாகுமா?

இந்தியாவில் வரும் 2024 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. செலவுகளை மிச்சப்படுத்தஇதனோடு மாநில சட்டசபைக்கான தேர்தல்களையும் நடத்திவிடலாமா? என மத்திய அரசின் சட்ட குழு ஆலோசித்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலாக்கப்பட்டால் 2024 ம் ஆண்டு நடக்கும் தேர்தலோ தமிழக சட்டசபைக்கான தேர்தலும் நடக்குமா? என்ற எதிர்பார்பில் தமிழக அரசியல் கட்சியினர் உள்ளனர்.

Update: 2022-07-24 05:31 GMT

புதுடில்லி; ,இந்திய லோக்சபாவிற்கு வரும் 2024 ம் ஆண்டுபொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜ ஆட்சியில் பிரதமர் நரேந்திரமோடி அரசின்  கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் செலவுகளை மிச்சப்படுத்த லோக்சபா தேர்தலோடு மாநில சட்டசபை தேர்தல்களையும் நடத்திவிடலாமா? என மத்திய சட்டக்குழு பரிசீலித்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண்ரிஜ்ஜி தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு

தமிழக அரசியல் எப்போதுமே பரபரப்பாகவே இருக்கும். அதுவும் கடந்த 10ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த அதிமுக தற்போது எதிர்கக்ட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. 10ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களிடையே ஒருபுறம் செல்வாக்கினை பெற பல திட்டங்களை முன்னெடுத்து அறிவித்து வருகிறது.இருந்தாலும் மத்திய அரசின் கேஸ்விலை உயர்வு, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் ஆளும் கட்சியின் மேல் அதிருப்தியில் இருப்பதாக எதிர்க்கட்சியான பாஜ, அதிமுக உள்ளிட்டவை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் திடீரென மத்திய அரசு 2024 ம் ஆண்டு லோக்சபாவோடு தமிழக தேர்தலை நடத்த அறிவித்தாலும் அதற்கு பாஜ தயார்நிலையில் உள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் கரூரில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முன்னாள் முதல்வர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை மத்திய அரசு அறிவிக்கும் பட்சத்தில் தமிழக சட்டசபைக்கு 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜ தலைவர் அண்ணாமலையும் மத்திய அரசு தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆலோசனையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் 2024 ம் ஆண்டு தேர்தல் நடக்குமா? அல்லது 2026 ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்குமா? என தெரியவில்லை என்றார்.இருந்தாலும் பாஜ எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாகவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜி எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர்குறிப்பிட்டுள்ளதாவது,

சரிபாதி செலவு

"தேர்தல்களை அடிக்கடி நடத்துவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் இதன் காரணமாக தடைபடுகிறது. தேர்தல்களை நடத்துவதற்கான செலவும் அதிகமாகிறது.

எனவே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை நடத்தி வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 50 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து இருக்கின்றன. மத்திய அரசு மக்களவைத் தேர்தல் செலவுகளையும், மாநில அரசுகள் சட்டப்பேரவைத் தேர்தல் செலவுகளையும் செய்கின்றன. மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் மத்திய அரசுடன் மாநில அரசுகள் 50 சதவீதம் செலவுகளை பிரித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக லோக்சபா குழு ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. அந்த குழு பரிந்துரைகளையும் வழங்கியுள்ளதால் . சட்ட ஆணையமே ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவை எடுக்க வேண்டும்." என அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News