இன்ஜினியரிங் கல்லூரி தரவரிசைப்பட்டியல் : அண்ணா பல்கலை. வெளியீடு

ranking list of engineering colleges-தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தர வரிசைப்பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Update: 2022-07-08 07:23 GMT

ranking list of engineering colleges-அண்ணா பல்கலைக்கழகம்.

ranking list of engineering colleges-தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) சராசரி கட்-ஆஃப் 200க்கு 198.90 பெற்று முதலிடம் பிடித்துள்ளது. குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி இரண்டாவது இடத்திலும் (196.69), கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (196.65) மற்றும் சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி (195.50) இரண்டாமிடத்திலும் உள்ளன.

சென்னையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா-ஐசிஏஎம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 12வது இடத்தைப்  பிடித்துள்ளது.சென்னையின் புறநகரில் உள்ள ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி 4வது இடத்திலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி 9வது இடத்திலும், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி 12வது இடத்திலும் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பும் கல்லூரிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த கல்லூரிகளை தரவரிசைப்படுத்துவதற்கு கணினி அறிவியல் அடிப்படையாக உள்ளது. கணினி அறிவியல் படிப்பை வழங்காத கல்லூரிகள் பட்டியலில் இடம்பெறவில்லை.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலைப் பார்த்து கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கீழே உள்ள லிங்கில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

https://drive.google.com/file/d/195il-_oYFFwaR_SPLnQIRicLIIIaprkv/view?usp=sharing

Tags:    

Similar News